பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் சந்திப்பு..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை ரேகா, வேல்முருகன், சனம், சம்யுக்தா, சுரேஷ், சுசித்ரா, நிஷா, ரமேஷ் என 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேகா, வேல்முருகன் ஆகியோர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், வீடியோ பதிவிட்டிருக்கும் நடிகை ரேகா, ரமேஷூம், நிஷாவும் இப்போது தான் வெளியே வந்திருக்கிறார்கள்.

சுசித்ரா, சனம் ஆகியோர் பிஸியாக இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் வர முடியவில்லை.

பிக்பாஸ் வீட்டுக்குள் தான் அது போட்டி. வெளியே வந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.