முதல் முறையாக அருண் விஜய்! பிரபல இயக்குனருடன் கூட்டணி!

அருண் விஜய் வாரிசு நடிகர் என்றாலும் கூட தனக்கான ஒரு தடத்தை ஆழமாக பதிவு செய்துவிட்டார். தடம் படம் அவருக்கு சினிமா பயணத்தில் நல்ல வழித்தடமாக அமைந்தது.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு குற்றம் 23, மாஃபியா படங்கள் முக்கியத்துவம் அளித்தன. அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் ஆகிய படங்கள் அவரின் கைகளில் இருக்கின்றன,

அண்மையில் அவரின் மகன் அர்னவ்- ஐ சினிமாவில் சூர்யா சிவக்குமார் முன்னிலையில் நடிகனாக அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் அவர் தன் மாமாவான இயக்குனர் ஹரியுடன் இணைகிறாராம். சூர்யாவின் அருவா படத்தில் இணைவதாக இருந்த ஹரி இப்போது இந்த அருண் விஜய்யுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்டஹ்க்கது.

டிரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதுடன் 2021 ஃபிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கி ஆகஸ்ட் மாதத்தை படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

ஹரியுடன் அருண் விஜய் இணைவது இதுவே முதல் முறை…