பிக்பாஸ் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் பிரபல மாடலாக இருப்பவர். பிக்பாஸ் வீட்டில் மிகவும் வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இத்தகைய சூழலில், பாலாஜி மற்றும் யாஷிகா இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வரலாகியது. இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றும் கூறப்பறது. அத்துடன், கடந்த 2017 ல் விஜய் டிவியில் ‘கனக்ஷன்ஸ் ‘ என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
தற்போது அந்த வீடியோவும் இணைய தளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே இருக்கின்ற உறவு குறித்து நடிகை யாஷிகா முதன்முதலாக வாய் திறந்துள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் லைவ் சாட்டில் பேசியபோது, அவரிடம் ரசிகர் ஒருவர் பாலாஜி குறித்த கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடிகை யாஷிகா ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகதான் இருந்தோம். அவரை நினைத்து நான் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவர் இந்த நாட்களுக்காக எத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.” என்று தெரிவித்துள்ளார். இவர் கூறுவதை பார்த்தல் தற்போது இருவரும் தொடர்பில் இல்லையோ என்று கிசுகிசுத்து வருகின்றனர்