கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாடு குறைந்து வருவதாலும், அதிக பராமரிப்பு செலவுகள் காரணமாகவும், 2015-ஆம் ஆண்டில் வாங்கிய லைவ்-ஸ்ட்ரீமிங் செயலியான Periscope-ஐ மூடுவதாக ட்விட்டர் நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
Periscope மொபைல் செயலி சிறிது காலமாக “நீடிக்க முடியாத பராமரிப்பு நிலையில்” உள்ளது என்று ட்விட்டர் ஒரு வலைப்பதிவவில் தெரிவித்துள்ளது .
ட்விட்டர் விரைவில் இந்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் விளைவுகள் காரணமாக பல திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
பெரிஸ்கோப்பின் முக்கிய திறன்களில் பெரும்பாலானவை ட்விட்டரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, மேலும் மார்ச் 2021-க்குள் அதை ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ட்விட்டரில் பகிரப்பட்ட ஒளிபரப்புகள் மறுபதிப்புகளாக இருக்கும், மேலும் பயனர்கள் பயன்பாட்டை அகற்றுவதற்கு முன்பு அவர்களின் பெரிஸ்கோப் ஒளிபரப்பு மற்றும் தரவுகளின் காப்பகத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.