பிரபல நடிகர் ரஜினியின் லிங்கா திரைப்படத்தில் நடிகை மீனாவா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

மேலும் இப்படத்தில் அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் நடிக்கின்றனர். நயன்தாராவும் சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் லிங்கா.

மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று தான் கூறவேண்டும். ஆம் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களின் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார். ஆம் அப்போது நடிகை மீனா ரஜினியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..