சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி..

மலையாளத்தில் வெளியான பிரேமன் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்தவர் முன்னணி நடிகை சாய் பல்லவி.

இவர் தமிழில் முதன் முதலில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் உருவாகிவரும் படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு குறித்து பேசியுள்ளார்.

இதை அவர் கூறியதாவது : சில நேரங்களில் நான் மகேஷ் பாபு படங்களைப் பார்க்கும்போது, ​​ஒரு நபரின் அந்த சரியான தோற்றத்தைப் பார்ப்பது சாத்தியமில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மகேஷ் பாபு தோல் பிரகாசிக்கிறது. என்று கூறியுள்ளார்.