பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?

நடிகை ஜோதிகா நடித்த சில படங்கள் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் பச்சைக்கிளி முத்துச்சரம்.

சரத்குமார், ஜோதிகா, ஆன்ட்ரியா என பலர் நடித்த இப்படத்தை கௌதம் மேனன் இயக்க 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது.

இதில் ஜோதிகாவின் நடிப்பு அவர் நடித்த படங்களை விட மாறுபட்டு இருக்கும்.

ஆனால் அவரது வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன் தானாம், அப்போது அவருக்கு சில வேலைகளால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.