மீண்டும் முதல் இடம் பிடித்த தளபதி விஜய்யின் திரைப்படம், TRP கிங் என கொண்டாடும் ரசிகர்கள்..

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் மிக பெரிய நட்சத்திரமாக விளங்குபவர் தான் தளபதி விஜய். இவரின் திரைப்படங்களுக்கு தற்போது இந்தியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலன்று இந்தியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது சென்ற வாரத்திற்கான TRP விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆம் அதில் மற்ற நிகழ்ச்சிகளை விட அதிக TRP புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது தளபதி விஜயின் பைரவா திரைப்படம்.