பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார், 70 நாட்களை கடந்த இந்நிகழ்ச்சி ஒன்னும் ஒரு மாதத்தில் 100 வது நாளை எட்டிவிடும். இறுதியில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார்? மக்கள் நினைத்தது நடைபெறுமா? அல்லது தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுமா என பல கேள்விகள் பார்வையாளர்களுக்கு இருக்கிறது.
வார இறுதி நாட்களில் மட்டும் நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்களுடன் உரையாடுவார். சூசகமாக பேசுவார், அரசியல் விசயங்களையும் அவ்வபோது அள்ளித்தெளிப்பது பலரும் பார்த்ததே.
பல சர்ச்சைகளுக்கு நடுவே இந்நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. வார நாட்களில் கமல்ஹாசன் தன் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தல் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது, படங்கள், நாடகங்கள் மூலம் குடும்பங்களை அவர் சீரழிக்கிறார் என விமர்சித்துள்ளார்.