பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது தமிழில் 70 நாட்களை கடந்துவிட்டது. கடந்த வாரத்தில் நிஷா மற்றும் ரமேஷ் இருவரும் குறைவான ஓட்டுகளால் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இன்னும் அனிதா, ஆரி, ரியோ, அர்ச்சனா, கேப்ரியல்லா, ஆஜித், ரம்யா, சோம் சேகர், பாலாஜி, ஷிவானி ஆகியோர் உள்ளனர்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் சில தினங்களுக்கு முன்பே தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நடிகர் நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கிவந்தார். இடையில் நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார். 100 நாட்கள் கொண்ட இந்நிகழ்ச்சியில் 98 நாட்களுக்கு பின் நடிகை மோனல் அண்மையில் வெளியேற்றப்பட்டார்.
இதுவரை உள்ளே இருந்து பலரையும் ஈர்த்து ஓட்டுகளை பெற்று காப்பாற்றப்பட்டு வந்த அவருக்கு இறுதி நேரத்தில் இப்படி நடந்தது மிகவும் அதிர்ச்சியானதாகவே உள்ளது.
இறுதிகட்டத்தில் தற்போது அபஜித், அகில்,அரியானா, ஹரிகா, சோகைல் என 5 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பிக்பாஸ் டைட்டிலையும், ரூ 50 லட்சத்தையும் வெல்லப்போகிறார்.
இறுதி போட்டி நிகழ்ச்சி வரும் டிசம்பர் 20 ம் தேதி ஞாயிறுக்கிழமை டிவி ஒளிபரப்புகிறார்களாம்.
யார் அந்த வெற்றியாளர் பொறுத்திருந்து பார்ப்போம்…