தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தல அஜித்தின் மச்சினிச்சியாக சினிமாவில் கால் பதித்தவர் நடிகை ஷாம்லி. அதற்கு முன்பே அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் இளம் நடிகையாக அறிமுகமாகினார். நடிப்பில் கவனம் இல்லாமல் சிறிதுகால விலகி இருந்தார் ஷாம்லி.
சமீபத்தில் ஷாலினியுடன் எடுத்த புகைப்படங்களும், ஷாம்லியின் க்ளாமர் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து, அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷாமிலி ஒரு திரைப்படத்தில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒட்டப்பட்ட வண்டியில் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி, தல ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது.
மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், நீங்க அஜித்துக்கு தான் மச்சினிச்சி என்பதை மறந்துட்டீங்களா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனராம்.
அதுமட்டுமில்லாமல், இந்த புகைப்படத்தை கண்ட இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதம் இணையத்தில் உருவாகி உள்ளதாம்.