தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜயகுமார். தன்னை தொடர்ந்து தன் பிள்ளைகளும் சினிமாவில் பிரபலங்களாக அனைவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
மகள்களை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தி பார்த்த விஜயகுமார் ஒரே மகன் அருண் விஜயையும் அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் வெற்றியை பார்க்காத அருண்விஜய் தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார். அதனைதொடர்ந்து பல கிரைம் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், அருண் விஜய்யின் 31 வது படத்தில் முதன்முதலாக ரெஜினா ஜோடியாக நடிப்பதால் இவர்களது கெமிஸ்ட்ரி பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட கார் ஓட்டுவது போல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அருண்விஜய் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் ரெஜினா, அருண் விஜய் உடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.