நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மேல் ஆசைப்பட்டு வீடு வாங்கி தந்தாரா பிரபல நடிகர்!

தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தமிழில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதன்பின், என்னமோ எதோ, ஸ்பைடர், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் சில படங்களில் நடித்து வந்த நடிகை, தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு, பிரபல நடிகர் ஒருவர், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மேல் ஆசைப்பட்டு வீடு வாங்கி வீடு வாங்கி தந்தார் என்று இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் : யாருக்காவது வீடு வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெரிய மனது இருக்கிறதா. அது தன்னுடைய சொந்த சம்பளத்தில் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை பற்றிய வதந்திகள் நாளுக்கு நாள் அதிகமாகவது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.