பிக்பாஸ் 4வது சீசன் 70 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஆரி, ஆஜீத், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஆஜீத் வீட்டைவிட்டு இவ்வாரம் வெளியேற இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இதைக்கேட்ட ரசிகர்கள் ஆஜீத்தா எலிமினேட் ஆகப்போகிறார் என ஷாக்காகியுள்ளனர்.