பிரபல இளம் நடிகைக்கு சூப்பர் மார்க்கெட்டில் வைத்து பாலியல் தொல்லை.!

பிரபல இளம் மலையாள நடிகையாக இருந்து வருபவர் அன்னா பென். இவர் கொச்சியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற சமயத்தில், பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பான தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அன்னா பென்னின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை அன்னா பென்னின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” நானும், எனது தாயும் சூப்பர் மார்கெட்டிற்கு சென்றிருந்தோம். ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், என்னை கடந்து சென்று இரண்டு ஆண்கள் வேண்டும் என்று எனது பின்புறத்தில் கைவைத்தனர்.

இதனால் எனக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கிருந்து நான் நழுவிச் என்ற நிலையில், அங்கும் என்னை பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர். எனது தாயார் வந்ததும் அங்கிருந்து தப்பி சென்றனர் ” என்று தெரிவித்துள்ளர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக கேரளா பெண்கள் ஆணையமும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.