இயக்குனர் அர்ஜுன் காமராஜ் இயக்கத்தில், திரையுலக பிரபலங்களான ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு மற்றும் பிளேடு ஷங்கர், முனிஷ்காந்த ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் கனா. இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முதலில் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்துள்ளார்.
அடுத்து தெலுங்கில் இன்னொரு கதையையும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, இந்தப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது கிராமத்தினரின் கனவை நனவாக்க மல்யுத்த வீராங்கனையாக களமிறங்கும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக உள்ளார். தற்போது இதற்காக மல்யுத்த பயிற்சி எடுத்து வருகிறார். அனைத்து நடிகைகளையும் போல சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்பொழுதும் கிராமப்புற பெண்ணாக தோன்றும் அவர் தற்போது மாடர்ன் உடையில் மலைக்கவைக்கும் கவர்ச்சியில் இருப்பதை கண்டு ரசிகர்கள் ஆச்சர்ய படுகின்றனர்.
View this post on Instagram