விபத்தில் உயிரிழந்த மலைப்பாம்புக்கு இறுதிச்சடங்கு

தமிழகத்தில் கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மலைப்பாம்பிற்கு இறுதிச்சடங்கு செய்து கிராம மக்கள் புதைத்த நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

பர்கூர்- திருப்பத்தூர் சாலை மல்லப்பாடி நாடார்கொட்டாய் கிராமத்தில் நேற்று அதிகாலை 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, சாலையை கடந்துள்ளது.

அப்போது அவ்வழியே வந்த காரின் சக்கரத்தில் மலைப்பாம்பு சிக்கி, தலை நசுங்கி உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் இறந்து கிடந்த மலைப்பாம்பிற்கு இறுதி சடங்கு செய்தனர்.

பாடை கட்டி பாம்பை தூக்கிச்சென்று, அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் புதைத்து வழிபட்டனர்.