அதிரடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அர்ச்சனா..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது இறுதிகட்டத்தை நோக்கி விறுவிறுபாகவே சென்றுகொண்டிருக்கிறது.

இதுவரை ரொம்பவே டஃப் போட்டியாளர்களே வெளிவந்துகொண்டிருக்கின்றனர். எப்படி இந்த வாரத்தில் கசிந்த தகவலின் படி ஆஜித் அல்லது அர்ச்சனா வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறி வந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் மேலும், தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா, சந்தோஷமாக இருப்பதுபோலவே அனைவரிடமும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

மேலும், அவர் சேகரித்த வைத்த காய்ன்களை அன்பு கேங்கிற்கும் பிரித்துகொடுக்க, அதன் பின்னர் ரியோ ரொம்ப நல்லவன் என கூறினார்.

மேலும், சோம் சேகரை நீ என் நல்ல நண்பன், லவ் யூ டா என சத்தமாக கூச்சலிட்டார். இறுதியில் பாலாவிடமும் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் எப்போவும் நான் அதை மட்டும் தான் சொல்வேன் என ஒற்றை வார்த்தையில் முடித்தார்.