பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் இவர்தான்.. பரிசுத்தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா?

நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது.

முதல் நாளில் 16 போட்டியாளர்களும் பின்னர் வைல்டு கார்டு நுழைவு மூலம் 3 போட்டியாளர்களும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

இதையடுத்து, இறுதிப் போட்டியில் 5 போட்டியாளர்கள் உள்ளனர். இன்றைய இறுதிப் போட்டி நிகழ்வு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

இதில், மக்களின் வாக்குகள் அடிப்படையில் மனகவர்ந்த போட்டியாளராக அபிஜீத் துதலா வென்றுள்ளார்.

மேலும், அவருக்கு பிக்பாஸ் கோப்பையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வழங்கினார். இதன்பின்னர் ஒரு பைக் மற்றும் ரூ. 25 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய அபிஜித் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பயணம் என்பது ஒரு கனவுக்கு குறைவானது அல்ல நாஜார்ஜூனா, மற்றும் சிரஞ்சீவி கையால் இந்த கோப்பையை பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை… மக்களுக்கு நன்றி என மகிழ்ச்சியிடன் தெரிவித்தார்.