தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விக்ரம். அவரின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கும், ஆனால் சமீபத்திய வருடங்களாக அவரின் படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
அடுத்ததாக அவரின் துருவ நட்சத்திரம், மஹாவீர் கர்மா, பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய படங்களின் மீது நம்பிக்கை எழுந்துள்ளது. கையில் பெரும் பட வாய்ப்புகளை அவர் தற்போது வைத்துள்ளார்.
அவரின் படங்களில் வந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி சாதனையும் படைத்திருக்கின்றன. அவ்வகையில் தற்போது Youtube ல் அதிக பார்வைகளை பெற்ற விக்ரமின் பாடல்களை பார்க்கலாம்..
- புது மெட்ரோ ரயில் – சாமி – 68 மில்லியன்
- து சாலே – ஐ (ஹிந்தி0 – 48 மில்லியன்
- பூக்களே – ஐ – 44 மில்லியன்
- என்னோடு நீ இருந்தால் – ஐ – 43 மில்லியன்
- மெர்சலாயிட்டேன் – ஐ – 42 மில்லியன்
- ஹெலனா – இருமுகன் – 35 மில்லியன்
- நுவ்வுண்டே நா – மனோஹரடு ( தெலுங்கு) – 30 மில்லியன்
- கண்ணை விட்டு – இரு முகன் – 30 மில்லியன்
- உசிரே போகுது – ராவணன் – 26 மில்லியன்
- தும் தொடோ நா – ஐ (ஹிந்தி)- 26 மில்லியன்