இப்படி நெருக்குகையில் வாழவே பயமாக இருக்கு… கண்ணீர் விட்டு கதறி அழும் ரக்ஷிதா!

நடிகை சித்ரா திடீரென மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்நிலையில் இதுபற்றி சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா கண்ணீர்விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “ஒருத்தி சென்ற பின்பு அவளை பற்றி தவறாக பேசுவது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஏன் இந்தத் துறையில் நடிகைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்த காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சித்ரா விஷயத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. நாங்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறோம் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

அவளை நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பு நிகழ்ச்சியில் சந்தித்த பொழுது கூட அவளும் அதையே தான் சொன்னார். அவர் எப்பொழுதுமே பிஸியாக தான் இருந்தார். இப்படி ஒரு கடின உழைப்பாளியை நாம் இழந்தது நமக்கு மிகப்பெரிய இழப்பு.

இப்பொழுதெல்லாம் செய்தியை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. அடுத்து யார் என்று மனநிலையிலேயே அனைவரும் இருக்கின்றனர்.

சித்ரா போன்ற தைரியமான பெண்களுக்கே இது நேரிடுகிறது என்றால் நாங்கள் என்ன செய்வது.

நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று சிலரும், சமூக வலைதளங்களில் சிலரும், வெளி உலகத்திற்கு வந்தால் அங்கே பலரும் எங்களை இப்படி நெருக்குகையில் வாழவே பயமாக இருக்கிறது” என்று கண்ணீர்விட்டு கூறியுள்ளார்.