தமிழ் சினிமா உள்ளிட்ட இந்திய சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பல படங்களில் தன்னுடைய வியக்கவைக்கும் நடிப்பால் உலக நாயகன் பட்டத்தையும் பெற்றார்.
பல புகழ் பெற்றாலும் சில சர்ச்சைகள், வதந்திகள், கிசுகிசுக்களால் பெரியளவில் பேசப்பட்டவரும் கமல்ஹாசன் தான். அந்தவகையில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டார். அதே சமயம் மூன்று திருமணத்தையும் செய்து கொண்டார்.
அதில் நடிகை சரிகாவை காதலிக்கும் போது கர்ப்பமும் ஆக்கியுள்ளார். கர்ப்பமான பிறகு தான் கமல் ஹாசன் சரிகாவை சாதாரணமாக திருமணம் செய்து கொண்டாரா. அப்படி பிறந்த குழந்தைதான் மூத்த மகள் சுருதி ஹாசன்.