கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் எப்போது தெரியுமா!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி, மிக பெரிய வெற்றியை அடைந்த படம் கே.ஜி.எப். இதனால் கே.ஜி.எப் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக விளங்கி வருகிறது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் கே.ஜி.எப் படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் தான்.

மேலும் இப்படத்தின் டீசர் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் பேசப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் அதனை உறுதி படுத்தும் வகையில், படக்குழுவே கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் வரும் ஜனவரி 2021 8ஆம் தேதி வெளியிட போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.