பிரபு தேவாவிற்கு ஜோடியாக திருமணமான 35 வயது நடிகை..

இந்திய சினிமாவின் நம்பர் 1 நடன இயக்குனர் என்றால், அது பிரபுதேவா தான். இவர் நடன இயக்குனராக பிரபலமானதை விட நடிகர் மற்றும் இயக்குனராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து, இயக்கியும் வருகிறார். மேலும், தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான போக்கிரி என்ற பிரமாண்ட ஹிட் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் யாமிருக்க பயமேன் பட இயக்குனர் டி.கே இயக்கும் பேய் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் நடிகர் பிரபு தேவா.

இந்நிலையில், இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக, முதன்முறையாக காஜல் அகர்வாலுடன் நடிக்கவுள்ளார். இதுதவிர மேலும் இரண்டு ஹீரோயின்களும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.