தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கடின உழைப்பு தேவைப்படும். அப்படி குறுகிய காலகட்டத்தில் பிரபலமானநடிகைகளின் வரிசையில் இருந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் கனவுகன்னியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி.
ரெண்டு படத்தில் அறிமுகமானாலும் நடிகர் விஜய்யின் வேட்டைக்காரன் படம் அவருக்கு பெரிய பிளாட்பாரத்தை கொடுத்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கு என பல படங்களில்மூத்த நடிகர்கள் படத்திலும் நடித்து வந்தார்.
5 வருடங்களுக்கு முன் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டி அதன் பின்னர் அதை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல பட வாய்ப்புகள் அவரின் கைவிட்டு சென்றது. தற்போது வரை அவரை தேடி எந்த தயாரிப்பாளர்களும் வாய்ப்பு கொடுக்க செல்லவில்லையாம்.
இருப்பினும் பாகுபலி 2 படத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவரை ஒல்லியாக காட்டுவதற்காகவே படக்குழு எக்ஸ்ட்ராவாக செலவு செய்தது.
இப்படியான நிலையில் தற்போது அனுஷ்கா கொரானா லாக்டவுன் நேரத்தை பயன்படுத்தி தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.