அட்லீ இயக்கத்தில் கடந்த 2018 தீபாவளிக்கு வந்த பிகில் படத்தில் விஜய்க்கு நண்பராக கால்பந்து விளையாட்டு வீரராக நடித்தவர் கதிர். இப்படத்திற்கு முன்பே அவர் கிருமி, மதயானைக்கூட்டம் என படங்களில் நடித்திருந்தார். ஆனால் பரியேறும் பெருமாள் படம் அவரின் சினிமா படங்களில் முக்கியமானதாகவும் திருப்பு முனையாகவும் அமைந்தது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அனைவராலும் பேசப்பட்ட படமாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் கதிர் சிகை படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர் அடுத்ததாக ஜாக் ஹாரிஸ் என்ற இயக்குனர் படத்தில் இணைந்துள்ளார்.
இதில் கதிருக்கு ஜோடியாக பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ஆனந்தியே ஜோடியாக நடிக்கிறாராம். மேலும் கைதி படத்தின் மூலம் Come Back கொடுத்த நடிகர் நரேன் முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.
சென்னை மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படம் படமாக்கப்படவுள்ளதாம். கதை பிடித்துவிட்டதால் கதிர் ஓகே சொல்லிவிட்டாராம்.