பிக்பாஸ் வீட்டிற்குள்ளே புகுந்த பிரபல பெண்! போட்டியாளர்களின் முகத்தில் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 கடந்த அக்டோபர் 6 ம் தேதி தொடங்கியது. இதுவரை உள்ளே வந்த போட்டியாளர்களில் 9 பேர் மட்டுமே தற்போது இருக்கிறார்கள். 77 நாட்களை இந்நிகழ்ச்சி கடந்துவிட்ட நிலையில் வரும் ஜனவரி 2 ம் வாரத்தில் நிகழ்ச்சி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல சர்ச்சை மிகுந்த ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 14 ம் அதே சமயத்தில் தான் தொடங்கியது. தற்போது 80 நாட்களை நெருங்கிவிட்டது. பிரபல நடிகர் சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது சீரியல், சினிமா நடிகையும் BJP கட்சியை சேர்ந்தவருமான Sonali Phogat Wild Card சுற்றில் உள்ளே செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரின் வழக்கறிஞரும் சூசகமாக கூறியுள்ளாராம்.

Sonali Phogat AMMA என்ற டிவி சீரியலில் நடித்துள்ளார். மேலும் பாகிஸ்தானியர் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல வேண்டும் என அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தினார். இவர் கடந்த வருட தேர்தலிலும் போட்டியிட்டாராம்.

பிக்பாஸ் புரமோவில் அவர் வந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.