கமல் ஹாசனின் கட்சிலிருந்து திடீரென விலகிய முக்கிய நபர்!

உலக நாயகன் கமல் ஹாசன் பல காலமாகவாகவே அரசியல் பேசி வந்தார். அவரை அரசியல் கட்சியினர் வம்பிழுக்கு உடனே முழு அரசியலில் இறங்கி அவர்களுக்கே கலக்கத்தை உண்டாக்கி அதிரடி கொடுத்தார்.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று அதிக வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் மூன்றாம் இடம் பிடித்து ஒரே வருடத்தில் சாதித்து காட்டியது அரசியல் பிரமுகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சியை தொடங்கி மதுரையில் மாநாடு நடத்தில் கொள்கை, கோட்பாடு, நேர்மை என்னவென்ன கேட்டவர்களுக்கு நேர்மை என்ற ஒரே வார்த்தையில் சாட்டையடியாக பதிலை கொடுத்தார்.

இன்னும் தேர்தலுக்கு 5 மாதங்கள் இருந்த போதிலும் முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி மக்களை சந்திக்க, மற்ற கட்சினரும் மக்களை சந்திக்க தொடங்கியதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அவரின் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை நிறுவன பொதுச்செயலாளராக இருந்து வந்த அருணாச்சலம் அக்கட்சியில் இருந்து விலகி இன்று தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துவிட்டாராம்.

வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் தான் இந்த முடிவு எடுத்ததாக அருணாச்சலம் கூறியுள்ளார்.