இளம் இயக்குனர் திடீர் மரணம்!

போட்டிகள், சவால்கள் நிறைந்த இந்த திரையுலகில் படம் முழுமையாக எடுக்கப்பட்டு, நல்ல முறையில் வெளியிட்டப்பட்டு, நஷ்டமில்லாமல் ஓடினாலே பெரும் லாபம் என்பது போலாக தற்கால சூழ்நிலை. நவின தொழில் நுட்பத்திற்கு மாறும் போது சில நேரங்களில் கடும் எதிர்ப்பும் நிலவுகிறது.

அப்படி தான் இயக்கிய படத்தில் ஓடிடியில் வெளியிட முன் வந்த போது தியேட்டர் உரிமையாளர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாகி படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றவர் இயக்குனர் ஷா நவாஸ்.

அப்படியான சாதனை செய்த அவரின் படம் சூஃபியும் சுஜாதையும் என்பதாம்.

மலையாள சினிமாவில் படதொகுப்பாளராக பணியாற்றிய ஷா நவாஸ் பாலாக்காடு பகுதியில் பட வேலைகளில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பால பாதிக்கப்பட்டு கடந்த 19 ம் தேதி கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் நேற்று கூறினர். இதனையடுத்து அவர் கொச்சி மருத்துவனைக்கு உயர் சிகிச்சைகாக அழைக்கப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் போகும் வழியிலே மரணம் அடைந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)