நயன்தாராவை மிஞ்சிய குட்டி நடிகை.!

தென்னிந்திய சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்புடன் அழைக்க கூடிய ஒரே நடிகை நயன்தாரா தான். ஆனால், அப்படி உடனடியாக முடிவுக்கு வந்து விடாதீர்கள் என்று பிரபல நடிகை ஒருவர் வேகமாக முன்னேறி வருகிறார்.

தற்போதைக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். 4 கோடியாக இருந்த சம்பளத்தை தற்பொழுது ஒரேயடியாக 8 கோடியாக அவர் மாற்றி விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில் குட்டி நடிகை ராஷ்மிக மந்தனா அவரை விட அதிகமாக ஏற்றி விட்டதாக ஒரு தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா.ராஷ்மிகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அவரது க்யூட் ஆக்டிவிடியால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது.

இவர் சமீபத்தில் நடிகை கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தை அவர் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த படம் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். ஒருவேளை ஓடிடியில் வெளியானால் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் பாலிவுட் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவிற்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய சூழலில், தனது சம்பளத்தை 3.5 கோடியிலிருந்து ஒரேயடியாக 10 கோடியாக ராஷ்மிகா மாற்றி விட்டாராம்.

பாலிவுட் நடிகைகளுக்கு அடுத்தபடியாக தென்னிந்திய சினிமாவில் சம்பளம் கூடுதலாக வாங்கும் நடிகையாக ராஷ்மிகா மாறி விட்டார். நயன்தாரா தான் இதில் முதலிடத்தில் இருந்தார். ஆனால், ஒரே நாளில் ராஷ்மிகா முதல் இடத்தை பிடித்து விட்டார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.