சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் @rajinikanth
அவர்கள் அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்! எனநம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்
சீமான் டுவீட் பதிவிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியான நிலையில் ரஜினியின் டிஸ்சார்ஜ் குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வந்த ‘’அண்ணாத்தா’’ சூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, ரஜினி தனிமைப்படுத்திக்கொண்டார்.
அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ரஜினியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் டிஸ்சார்ஜ் குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனநம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்
சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த்@rajinikanth
அவர்கள் உடல்நலிவுற்றுள்ள செய்தியறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்! எனத் தெரிவித்துள்ளார்,
சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் உடல்நலிவுற்றுள்ள செய்தியறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்!
— சீமான் (@SeemanOfficial) December 26, 2020