1) சுதா கொங்கரா: மாதவனின் இறுதிச்சுற்று படத்தின் மூலமாக தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் சுதா கொங்கரா தற்போது சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் மூலமாக இன்னும் மெருகேறி இருக்கின்றார். தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். மேலும், பாவ கதைகளில் தங்கம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இளைஞர்களின் முக்கிய தேர்வாக அவர் இருக்கிறார்.
2) விருமாண்டி : ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதி நடித்த க\பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளார். வெளிநாட்டில் இறந்துப்போன கணவரின் உடலை மீட்டு வர கைக்குழந்தையுடன் போராடிய மனைவியின் ஒரு டாக்குமென்டரி படமாகவே இந்த படம் இருந்ததால் மிகுந்த வரவேற்பை பெற்றது.
3) தேசிங் பெரியசாமி: தனது முதல் படத்தையே ஹாலிவுட் ரேஞ்சுக்கு அசத்தியிருக்கிறார். வழக்கம்போல ஹீரோ, வில்லன் ஸ்கிரிப்ட் இல்லாமல், பக்காவா ப்ளான் பண்ணி கொள்ளையடிப்பவர்கள் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று காட்டியிருப்பார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்க தவறவில்லை. அவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
4) ஆர்ஜே பாலாஜி: சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஒரு பக்கா கமர்சியல் படமாக இருந்தது. நகைச்சுவையுடன் அனைவரையும் யோசிக்க வைத்ததன் மூலமாக மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.
5) விக்னராஜன் – அந்தகாரம்: இயக்குநர் அட்லியின் தயாரிப்பில் அந்தகாரம் படம் உருவாக்கியது. இதனை விக்னராஜன் இயக்கி இருப்பார். நெட்பிலிக்சில் வெளியான இந்த திரைப்படம் மக்களை மிரட்டி எடுத்தது என்றால் மிகையாகாது.