சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் விஜய் சேதுபதி நடித்த படங்கள் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.
அப்படி அவர் நடித்த படங்களில் மக்களால் அதிக கவனம் செலுத்தப்பட்ட படம் சூது கவ்வும். நலன் குமாரசாமி இயக்கிய இப்படம் அதில் நடித்தவர்கள் அனைவருக்கும் பெரிய திருப்பத்தை கொடுத்தது.
கடந்த சில வருடங்களாகவே இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசப்படுகிறது.
தற்போது என்னவென்றால் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.