சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆனது 200 நாடுகளுக்கும் மேல் பரவி தற்போது வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஒருபக்கம் எண்ணிக்கை குறைந்து, தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் மற்றொரு பக்கம் புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.
இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
தலைநகர் பீஜிங்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து பீஜிங் நகரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அவசர நிலையை சீனா பிறப்பித்துள்ளது.
மேலும், புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட 21 கொரோனா வைரஸ் பாதிப்புகள் சீனாவில் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.