பொங்கல் அன்று இந்த நடிகையின் இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்

நடிகை நிதி அகர்வால் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்த இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார்.

ஆம் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படம் தான் இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம், அதனை தொடர்ந்து இவர் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த மாதம் ஜனவரி 14 ஆம் தேதி இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகவுள்ளது, ஆம் பூமி திரைப்படம் ஹாட் ஸ்டாரிலும், ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கிலும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து தற்போது அவர் இது குறித்து வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் முகக்கவசத்துடன் ஈஸ்வரன் படத்தை திரையரங்கிலும், பூமி படத்தை ஹாட் ஸ்டாரிலும் கண்டு களிக்கும் படி கூறியுள்ளார்.