பிக்பாஸ் சீசன் 4ல் கடந்த வாரம் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார், வெளியே வந்ததும் சமூகவலைதளத்தில் என்ன பதிவிடப்போகிறார் அனிதா என்று காத்திருந்த பிக்பாஸ் ரசிகர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பையும் அளித்திருந்தனர்.
இந்நிலையில் ஆரியை எதிர்த்து பேசியதால் தான் உங்களை வெளியே அனுப்பினோம் என்று அவரது ரசிகர் ஒருவர் கருத்து பதிவிட, அதற்கு பதிலளித்த அனிதா,
“ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம் என்பது வாக்கு செலுத்துபவர்களுக்குத் தான் அசிங்கம். போட்டியில் நன்றாக விளையாடதவர்களை தான் வெளியே அனுப்ப வேண்டும்.
அதற்குத் தான் பிக்பாஸில் ஓட்டுப் போடுகிறார்கள். அதுதான் போட்டியின் விதி. உங்களைப் போன்றவர்களின் செயலால் தான் தகுதியில்லாதவர்கள் இன்னும் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இதைக்கேட்டால் ஆரி தான் வருத்தப்படுவார்.
உங்களது கருத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஆரி ரசிகரின் ஓட்டுகள் எனக்கு வந்ததாக சொல்வது எனக்கு பெருமை இல்லை.
அப்படி அவரது குறையை சொல்லாமல் ஆரிக்கு ஆதரவாக செயல்பட்டு அதன் மூலம் கிடைக்கும் ஓட்டுகளின் மூலமாக இறுதிப்போட்டிக்குச் செல்வதை விட, நம்பிக்கையை உடைத்த அவரது செயலை சொல்லிக்காட்டி விட்டு, எனக்கே எனக்காக வாக்களித்தவர்களின் ஓட்டுகளுடன் வெளியே வந்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்.
வாழ்த்துகள் ஆரி. என்னுடைய கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய விளக்கம் தான். யாரும் 100% சரியானவர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.