தமிழ் சினிமாவில் பல வருடங்களாக உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்.
இவர்களில் கமல் தனி கட்சி ஆரம்பித்து செயல் படுத்தி வருகிறார், மேலும் வரும் 31 ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயர் குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் உடல்நலம் தேர்ச்சி பெற்று மருத்துவர்களின் ஒரு சில அறிவுறுத்தலின் படி சென்னை திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் இன்று காலை ரஜினி தனது அரசியல் கட்சியை தொடங்கவில்லை என அறிவித்து இருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது கமல் அவரின் அரசியல் பிரச்சாரத்தின் போது “என் ரஜினி நலமாக இருக்க வேண்டும், பிரச்சார பயணம் முடிந்து ரஜினியை சந்திப்பேன்.
அவரை சந்தித்த பின் நான் உங்களுக்கு சேதி சொல்கிறேன்” என அவர் மேடையில் கூறியுள்ளார்.
#KamalRajiniForever#என்_ரஜினி ♥️ pic.twitter.com/boZOJlIdIA
— Kaushik LM (@LMKMovieManiac) December 29, 2020