விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எப்போதோ தயாராகி விட்டது.
படத்தின் ரிலீஸ் வரும் ஜனவரி 13ம் தேதி என படக்குழுவே இன்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர்களுடன் அறிவித்துள்ளனர்.
ரசிகர்கள் இப்போதே அந்த நாளுக்காக ஆவலாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த நேரத்தில் பட ரிலீஸிற்கு பிரச்சனை ஏற்படும் வகையில் ஒரு தகவல்.
அதாவது வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த சிலருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்துள்ளனர். எனவே மக்கள் மத்தியில் கொரோனா இரண்டாவது அலை பயம் அதிகம் ஏற்பட்டுள்ளது
இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகும் இல்லை ரிலீஸ் ஆகாதா என்ற குழப்பத்திலும் சோகத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.