தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித் குமார்.
இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கிவர, போனி கபூர் தயாரித்து வருகிறார்.
தல அஜித் சில ஆண்டுகளாக எந்த ஒரு ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பதை தவிர்த்துவிட்டார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பல சுவாரஸ்ய விஷயங்களை நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதில் ” எனது தோல்விக்கு பின் என்னுடன் இருந்த பல பேர் ஓடிவிட்டனர். ஜி, ஆஞ்சநேயா, உள்ளிட்ட படங்களின் தோல்வியால் பல மனிதர்களை பற்றி தெரிந்து கொண்டேன். இந்த தலைமுறை நடிகர்களில் அதிக தோல்வி படங்கள் கொடுத்த ஒரே நடிகர் நான் தான் ” என்று தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம் அனுபவங்களை அதில் பகிர்ந்து கொண்டார்.