நடிகர் ஆரி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகு இரண்டாவது படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ‘அலேகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனேவே கடந்த வாரம் ஆரியின் ‘பகவான்’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே போட்டியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார்.
எஸ்.எஸ்.ராஜமித்ரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aleka 1st Look 💕#Aari #AariArujunan @aariarujunanactor #biggbosstamil4 @narayan_aadhi @shortfundly_ind @glowstarcreations pic.twitter.com/VkcRa5hy9W
— Aari Arjunan (@Aariarujunan) December 29, 2020