சிம்புவின் இந்த படத்தில் நடிக்கிறாரா பிரியா பவானி ஷங்கர்…

நடிகர் சிம்பு இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை கொடுத்து வருகிறார்.

உடல் எடை குறைத்தது, எல்லா சமூக வலைதளங்களிலும் மீண்டும் வந்தது எல்லம் வைரலாக பேசப்பட்டது.

அதோடு அடுத்தடுத்து ஈஸ்வரன், மாநாடு என படப்பிடிப்புகளை முழுமையாக முடித்தார். அண்மையில் அவர் பத்த தல என்ற பெயரில் புதிய படம் கமிட்டாகி இருப்பதாக போஸ்டர் வெளியிட்டார்.

கிருஷ்ணா இயக்க கௌதம் கார்த்திக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

தற்போது இப்படம் குறித்து ஒரு தகவல், அதாவது ரசிகர்களின் ஆசை நாயகியான பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.