சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருந்தது. இவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
இதையடுத்து, நாளுக்கு நாள் சித்ராவின் வழக்கில் திடீர், திடீர் திருப்பங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது சித்ராவின் உதவியாளர் மூலம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், சித்ராவுக்கு சலீம் என்ற உதவியாளர் நீண்ட நாட்களாக உதவியாக இருந்து வந்துள்ளார்.
மேலும், சித்ரா எந்த ஒரு படப்பிடிப்புக்கும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் இவரை கூட அழைத்துச் செல்வது வழக்கமாம்.
இதனிடையே சித்ராவை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதுதான் இவரது வேலையாம்.
ஆனால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஹேமந்த், சலீம் என்ற உதவியாளர் மீது வேண்டுமென்றே பழி போட்டு அவரை வேலையைவிட்டு தூக்கியதாக சமீபத்தில் முக்கியப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சலீம்.
அதில், சலீம் மீது ஹேமந்த் வேண்டுமென்றே சித்ராவை ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதாக குற்றம் சாட்டி வேலையை விட்டு நீக்கி விட்டார்.
ஒரு கட்டத்தில் என்னை சித்ராவிடம் இருந்து விரட்டி அடித்தார்.. அப்போதுகூட சித்ரா அமைதியா இருந்தார். ஏன்னு தெரியல..10 மணி வரை படுக்கையை விட்டு எழ மாட்டார்.. வேலைக்கும் போக மாட்டார். சித்ராவுக்கு ஷூட்டிங்கில் போன் செய்து கொண்டே இருப்பார்.
மேலும், சித்ரா ஹேமந்த்திடம் வசமாக ஒரு விஷயத்தில் சிக்கிக் கொண்டதாகவும் முக்கிய பாயிண்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அது எந்த மாதிரி விஷயம், எதனால் சித்ரா ஹேமந்த்தை விட்டு வெளியில் வர முடியாமல் சிக்கித் தவித்தார் என்ற கோணத்தில் இந்த வழக்கை விசாரித்தால் நிச்சயமாக உண்மை கிடைக்கும் என்கிறார்கள்.