நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், அப்போது படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதன்பின் சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.
மேலும் சமீபத்தில் அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் சென்னை திரும்பினார், ஆனால் ரஜினி ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் அவரின் அரசியல் கட்சி பெயர் குறித்து வரும் 31 ஆம் தேதி ரஜினி அறிவிக்கவிருந்த நிலையில், தற்போது அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மேலும் தற்போது அவர் மிகவும் முடியாத நிலையில் காரில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்டைல் மன்னனாக இருந்த ரஜினியை இப்படி பார்த்த ரசிகர்கள் மனமுடைந்து உள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
Every hard decision has a reason and pain 😔
See the video 💔 & answer fans! Thalaiva we will be with you in all aspects!#Rajinikanth #WeloveYouThalaiva ❤️ pic.twitter.com/g7MF0kARBG— Rajini🤘Followers (@RajiniFollowers) December 29, 2020