உயிர்கொல்லி வைரஸ் தடுப்பூசி போட்டு கொண்ட முதல் நடிகை இவர்தான்!

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடங்கப்பட்டு உள்ளது
அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை என்ற பெருமை பாலிவுட் நடிகை ஒருவரை சேர்ந்துள்ளது. கடந்த 1990களில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷில்பா ஷிட்ரோகர். இவர் அமிதாப்பச்சன் நடித்த ’ஹம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது இவர் தனது கணவர் மற்றும் மகள்களுடன் துபாயில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்த கொரோனா தடுப்பு ஊசி ஒன்றை தான் போட்டுக் கொண்டதாகவும் அதற்காக தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு நன்றி கூறுவதாகவும் ஷில்பா ஷிட்ரோகர் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷில்பா பதிவு செய்துள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் ஷில்பா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகைக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இவருடைய சகோதரிதான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரிதா ஷிட்ரோகர் என்பது குறிப்பிடத்தக்கது