மாஸ்டர் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகை!

மாஸ்டர் படத்துக்கு சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே ரிலீஸ் செய்யலாம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் அதை ரத்து செய்த தமிழக அரசு,சிறப்புக் காட்சிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கவில்லை. இதனால் பண்டிகை நாட்களான ஜனவரி 13 முதல் 17 வரை தினசரி 7 காட்சிகள் வரை திரையிட முடிவு செய்துள்ளனர். சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவும் தற்போது ஜரூராக நடந்து வருகிறது.