விஜய்க்காக உருவாக்கிய கதையில் சிவகார்த்திகேயனா?

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்க்காக உருவாக்கிய கதையில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற இப்போது நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில் முருகதாஸ் விஜய்க்காக அவர் உருவாக்கிய கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயனை அண்மையில் ஏ ஆர் முருகதாஸ் சந்தித்ததாக ஒரு தகவல் உலவியது குறிப்பிடத்தக்கது.