டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கை வென்று சோம் முதல் ஆளாக பைனலுக்குள் செல்ல அவரைத்தொடர்ந்து ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா மற்றும் கேப்ரியலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கின்றனர்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பிக்பாஸ் சீசன் 4-ன் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்பது குறித்த விவாதங்கள் பெருமளவில் நடைபெற்று வருகின்றன.
நேற்று பாலாஜி முதலில் காப்பாற்றப்பட்ட செய்தியை சொன்ன கமல் தொடர்ந்து ரியோ காப்பாற்றப்பட்ட செய்தியையும் சொன்னார். அவர் ஒரு பிரேக் எடுத்து செல்ல வீட்டுக்குள் இருந்தவர்கள் அதுகுறித்து தங்களுக்குள் உரையாடிக்கொண்டு இருந்தனர்.
Best moment of the day ! 😂 #Balaji #BalajiMurugaDass #Ramya #RamyaPandiyan #Shivani #Rio #RioRaj #Som #Somshekar #Sam #Samuktha #Anitha #AnithaSambath #Archana #Gabby #Aari #AariArjunan #SureshChakravarthy #BBSeason5 @ikamalhaasan#BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/5EuIpmM93I
— 𝓟𝓮𝓽𝓮𝓻 𝒫. (@peter_offcl) January 10, 2021
அப்போது ரியோ கேமரா முன்னால் சென்று நான் பைனலுக்கு போக மாட்டேன்னு சொன்னவங்களுக்கு வெரி ஸாரி. நான் பைனல் போய்ட்டேன் என கூறினார்.
இதைப்பார்த்த சோம் யாரு அது? என கேட்க அது சொல்ல மாட்டேன். ஆனா நீயும் போக மாட்டேன்னு சொன்னாங்க என்று கூறினார். இது கேட்டு அப்போ நானும் ஸாரி என சோம் கூறினார்.
இந்த நிலையில் அப்படி சொன்னது யார்? என்பது குறித்து ஒரு தீவிர விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி அனிதா தான் அப்படி சொன்னார் என ஒருசிலர் சொல்ல, வேறு சிலர் அவங்க வெளில போய்ட்டாங்க . அப்புறம் எதுக்கு அவங்க பத்தி பேசணும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.