கமல் சொன்ன ஒத்த வார்த்தை.. தரையில் விழுந்து கதறியழுத பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் பாலாஜி காப்பாற்றப்பட்டதாக கமல் கூறினார் . இதனைக் கேட்ட பாலாஜி சந்தோஷத்தில் கதறி அழுதார்.

இன்று சிவானி வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது எதை விட்டுச் செல்ல விரும்புகிறீர்கள், எதை எடுத்துக் கொண்டு போக விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் அழகாக விடை அளித்துள்ளனர்.

குறை, கோபத்தை விட்டுச் செல்வோம், நேர்மை, பொறுமையை எடுத்துச் செல்வோம் என 7 பேரும் ஆரியாக மாறிய தருணத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.


பிக் பாஸ் வீட்டில் நல்லதும் இருக்கும் கெட்டது இருக்கும் போட்டியாளர்களும் பார்வையாளர்களும் தங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்பது தான் இந்த ஷோவோட கான்செப்ட் என்று சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஷோ முடியவுள்ள நிலையில், யார் எதை விட்டுச் செல்லப் போறீங்க, எதை எடுத்துச் செல்லப் போறீங்கன்னு கமல் கேட்டார்.

கமல் முதல் ஆளாக ரம்யாவின் பெயர் சொல்லி கேள்வியை எழுப்ப, குறை சொல்வது என் கேரக்டரே இல்லை சார், இங்க நாமினேஷன் செய்ய, மற்றவர்களின் குறையை யோசித்து சொல்லும் பழக்கம் இனி இருக்காது. அதை இந்த பிக் பாஸ் வீட்டோடு விட்டுச் செல்வேன். அதே போல மற்றவர்கள் நம்மைப் பற்றி குறை சொன்னாலும், அதை ஏற்று சரிசெய்ய வேண்டும் என்றார்.

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் அதிகமாக வெளிப்படுத்தியதே கோபத்தை தான். அதைத் தான் விட்டுச் செல்ல விரும்புவதாக கூறினார். மேலும், நல்ல விஷயங்களை எடுத்துட்டு போகணும், யுனைட்டி இன் டைவர்சிட்டி தான் இந்த பிக் பாஸ் வீடு என நம்புகிறேன் என்றார்.

கமல் கேட்ட அந்த கேள்விக்கு ஷிவானி நாராயணன், பிரஷரை விட்டுச் செல்லணும், இந்த வீட்டில் இத்தனை நாட்களாக கத்துக் கிட்ட பொறுமையை எடுத்துச் செல்லணும் என அழகாக கூறினார் ஷிவானி நாராயணன். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி வெளியேறிய நிலையில், நிச்சயம் அவர் கிட்ட இருந்த பிரஷர் ரிலீஸ் ஆகியிருக்கும் என்றே தெரிகிறது.

நேர்மையின் ஆங்கிலச் சொல் தான் ஹானஸ்டி. இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து ஹானஸ்டியை எடுத்துச் செல்ல வேண்டும், குறைகளை அக்சப்ட் பண்ற மனசை கொண்டு போகணும், நல்லதை பார்க்கணும் என கேபி க்யூட்டாக பேசினார். ஓவர் திங்கிங்கை விட்டுச் செல்ல ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல வெளியே போனாலும் கேள்வி கேட்பதை எடுத்துச் செல்வேன். கேள்வி தான் ஆயுதம் என்றார். மேலும், ஆண், பெண் சரி சமம் என்பதையும் அதிகமாக நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதையும் நல்லாவே புரிந்து கொண்டேன் சார். சொல்வதை இன்னமும் தெளிவா சொல்லணும்னு மத்தவங்க சொன்னாங்க, அதையும் வளர்த்துக்க பார்க்கிறேன். ஆரியிடம் இருக்கும் நல்லதை எடுத்துக்கோங்க, கெட்டதை என்னை போலவே நீங்களும் விட்டுடுங்க என மக்களுக்கும் அட்வைஸ் பண்ணார்.

அழுகையை மறைத்து வாழத் தேவையில்லை. நெஞ்சம் கனத்தால் அழுத விடணும்னு புரிஞ்சிக்கிட்டேன் சார் என சோம் சொன்னார். யாரு கிட்டயும் தள்ளி இருக்கக் கூடாது. கிட்ட போய் பார்த்தா, தப்பா தெரியுறவங்க, நல்லவங்களா தெரிவாங்க என கத்துக்கிட்டேன். என்னோட கோபம் இங்கே பத்து பைசாக்கு கூட பிரயோஜனமில்லை என்பதை புரிந்து கொண்டேன், அதை அப்படியே விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்றார்.

கோபம் தப்பானது அல்ல, அதுக்கு என்கிட்ட மாற்று கருத்து இருக்கு, ஸ்டோர் யுவன் ஆங்கர் என பழமொழியே இருக்கு, முண்டாசுக் கவிஞன் பாரதியாரும் ரெளத்திரம் பழகு என்றார். அவரோட வீட்டுக்குப் போனப்ப எல்லாம் ஏகப்பட்ட நினைவுகள் மெய் சிலிர்க்க வைத்தன. சரியான விஷயத்துக்கு கோபப்படலாம். ஆனால், கோபம் நம்மை ஆட்டி படைக்கக் கூடாது என்றார்.

என்ன எல்லாம் திடீர்னு ஆரியா மாறி, ரொம்ப நல்லவர்கள் போல நடிக்கின்றனர். பாலா, ரியோ, ரம்யா உங்களுக்கு எல்லாம் இதெல்லாம் சுத்தமா செட்டாகல, எப்படியோ மறுபடியும் சண்டை போட்டுக்க போறீங்க என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். நல்ல விதமா மாறினால் நல்லது தான். வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.