இளம் பெண் ஒருவர் ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக சமூக ஊடகங்களை பார்க்கிறார்கள்.
மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைத்தளங்கள் நிரம்பியுள்ளன.
View this post on Instagram
பாடுதல், நடனம், ஆர்ட் போன்ற பலவகையான திறமைகளை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும்.
அந்த வகையில், டிரம்மர் ஃபெய்த் பென்சனின் என்ற பெண்ணின் இசை வீடியோ மற்றும் அவரது அற்புதமான நடிப்பு உங்களை அவரது ரசிகராகவே மாற்றிவிடும்.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரம்ஸ் வாசிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த விடீயோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.