பிக்பாஸ் வீட்டில் ரமேஷ் செய்த வேலை..

பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தாளியாக வந்துள்ள ஜித்தன் ரமேஷ், ஆரியிடம் ஏன் மன்னிப்பு கேட்டாய் என்று பாலாஜியை ஏற்றி விடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதற்காக எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. எல்லோரும் பழையப்படி கேங்காக மாறியுள்ளனர்.

பெட்ரூமில் படுத்தப்படி ஜித்தன் ரமேஷ், கேபி, பாலாஜி ஆகியோர் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஆரி குறித்தும் பேசும், ரமேஷ் அவர் லேசாக நோண்டி விடுகிறார். நீ வேகமாய் கத்தி விடுகிறாய். நீ கத்தினாலும் உடனே போய் ஏன் சாரி சொல்ற.. நீ சாரி சொல்வதால் உன் மீதுதான் தவறு என்பதை போல் ஆகிறது.

அதற்கு பதில் கூறும் பாலாஜி, நான் சாரி கேட்டதே அவருடைய வயதுக்கு மரியாதை கொடுத்துதான். அதில் ஒன்றும் தவறு இல்லை புரோ என்று ரமேஷுக்கு பதில் சொல்கிறார். ஆனால் ரமேஷ் அதனை ஏற்கவில்லை, நீ சாரி சொல்லியிருக்கக் கூடாது என்று கூறிக்கொண்டிருந்தார்.

ஜித்தன் ரமேஷின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.